close
Choose your channels

அறுவை சிகிச்சைக்கு பின் வீல்சேரில் வீடு திரும்பிய அர்ச்சனா: ரசிகர்கள் வாழ்த்து!

Thursday, July 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளரும் தொகுப்பாளினியுமான அர்ச்சனா சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டதாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் விரைவில் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்று கூறியிருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அர்ச்சனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு தனது நன்றியை தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வீல்சேரில் வெளியே வந்து காரில் வீட்டுக்கு செல்லும் காட்சியும், வீட்டில் காரிலிருந்து இறங்கி வீல்சேரில் உட்கார்ந்து வீட்டிற்குள் செல்லும் காட்சியும் உள்ள வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அர்ச்சனாவை பலர் விமர்சனம் செய்துள்ளார்கள்.இருப்பினும் அவரது தற்போதைய நிலையை பார்த்து அவர் மீண்டும் பழையபடி மாற வேண்டும் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment