'பிக்பாஸ்' ஆரவ் படத்தை இயக்கும் சிம்பு பட இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,October 26 2017]

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் ஆரவ் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஓவியா ஆர்மியினர்களின் எதிர்ப்பை மீறி வெற்றி பெற்ற ஆரவ்வுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்தது மட்டுமின்றி கோலிவுட்டில் வாய்ப்புகளும் குவிந்தது

இந்த நிலையில் தற்போது ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஆரவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே 'சைத்தான்' படத்தில் ஒரு சிறு கேரக்டரில் ஆரவ் நடித்திருந்தாலும் நாயகனாக அவர் நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் சரவணன் இயக்கவுள்ளார். இவர் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம் மற்றும் கவுதம் கார்த்திக் நடித்த 'சிப்பாய்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

கோலிவுட் திரையுலகில் நாயகனாக அடியெடுத்து வைக்கும் பிக்பாஸ் நாயகன் ஆரவ்வுக்கு இந்த படம் திருப்புமுனையை கொடுத்து அவர் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

More News

மெர்சல் சென்சார் சான்றிதழ் திரும்ப பெறப்படுமா? நாளை நீதிமன்றத்தில் விசாரணை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நவம்பர் 7ல் முக்கிய அறிவிப்பு: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான அரசியல் கருத்துக்களை டுவிட்டரிலும் பேட்டியிலும் கூறி வந்தார். அவருடைய விமர்சனத்திற்கு தமிழக முதல்வரும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமலை விட விஜய்யின் உள்கட்டமைப்பில் பலம் அதிகம்: எஸ்.வி.சேகர்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ள நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்களே இல்லை என்று கூறலாம்

'தளபதி 62' படத்தின் ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா?

கடந்த தீபாவளி அன்று வெளியான 'தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவர தொடங்கிவிட்டது.

'பாகுபலி' இசையமைப்பாளருடன் இணைந்த ஆஸ்கார் நாயகன்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி என்பது மறுக்க முடியாத உண்மை.