பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னரின் திருமணம்: சக போட்டியாளர்கள் நேரில் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கு திருமணம் என்ற செய்தி கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலானது. பிக்பாஸ் ஆரவ், நடிகை ராஹே என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. நடிகை ராஹே, கௌதம் மேனன் இயக்கிய ’ஜோஷுவா இமைபோல் காக்க’ என்ற படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதியாகியுள்ளது. இன்று ஆரவ்-ராஹே திருமணம் சிறப்பாக நடந்தது. இந்த திருமணத்திற்கு பிக்பாஸ் போட்டியாளர்களான காயத்ரி ரகுராம், ஆர்த்தி, பிந்துமாதவி, ஹரிஷ் கல்யாண் உள்பட பலர் வருகை தந்து மணமகன் மற்றும் மணமகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இது ஒரு காதல் திருமணம் என்றும் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத்து இந்த திருமணம் இன்று நடைபெற்றுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ஆரவ்வை காதலித்ததாக கூறப்பட்ட நடிகை ஓவியா இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாக தெரியவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout