காவல்துறை அதிகாரியாக அரசாணை.. பிக்பாஸ் நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்..
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு காவல்துறை அதிகாரியாக பணி நியமன அரசாணை கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிக் பாஸ் மலையாள நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அப்சரா, மலையாள டிவி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் அதன்பின் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அடுத்து ராணுவத்தில் சேர முடியாமல் போய்விட்டதாகவும் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.
இந்த நிலையில் அப்சராவின் தந்தை காவல்துறையில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் விபத்தில் காலமான நிலையில், காவல்துறையில் ஒருவர் மரணம் அடைந்தால் வாரிசுக்கு வேலை கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்போது அப்சராவுக்கு காவல்துறையில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடிகை அப்சரா தொலைக்காட்சி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் காவல்துறையா? டிவி நடிகையா? என்ற நிலை வந்த போது அவரது குடும்பத்தினர் நிரந்தர வருமானம் என்பதால் காவல்துறை பணியை ஏற்றுக் கொள்ள அறிவுரை கூறியதாகவும், இதனை அடுத்து காவல் துறையில் அவர் இணைய முடிவு செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
காவல் துறையில் பணியின் சேர்வதற்கான அரசாணை தனக்கு கிடைத்து விட்டதாகவும் காவல்துறை பணியில் விரைவில் சேர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்வேன் என்றும் அப்சரா தெரிவித்துள்ளார். கலைத்துறையில் இருந்து காவல் துறைக்கு செல்லும் அப்சராவுக்கு நடிகர் நடிகைகள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments