காவல்துறை அதிகாரியாக அரசாணை.. பிக்பாஸ் நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்..

  • IndiaGlitz, [Wednesday,July 24 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு காவல்துறை அதிகாரியாக பணி நியமன அரசாணை கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிக் பாஸ் மலையாள நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அப்சரா, மலையாள டிவி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் அதன்பின் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அடுத்து ராணுவத்தில் சேர முடியாமல் போய்விட்டதாகவும் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் அப்சராவின் தந்தை காவல்துறையில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் விபத்தில் காலமான நிலையில், காவல்துறையில் ஒருவர் மரணம் அடைந்தால் வாரிசுக்கு வேலை கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்போது அப்சராவுக்கு காவல்துறையில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகை அப்சரா தொலைக்காட்சி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் காவல்துறையா? டிவி நடிகையா? என்ற நிலை வந்த போது அவரது குடும்பத்தினர் நிரந்தர வருமானம் என்பதால் காவல்துறை பணியை ஏற்றுக் கொள்ள அறிவுரை கூறியதாகவும், இதனை அடுத்து காவல் துறையில் அவர் இணைய முடிவு செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

காவல் துறையில் பணியின் சேர்வதற்கான அரசாணை தனக்கு கிடைத்து விட்டதாகவும் காவல்துறை பணியில் விரைவில் சேர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்வேன் என்றும் அப்சரா தெரிவித்துள்ளார். கலைத்துறையில் இருந்து காவல் துறைக்கு செல்லும் அப்சராவுக்கு நடிகர் நடிகைகள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More News

தனுஷின் 'ராயன்' படத்திற்கு சிறப்பு காட்சி.. தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எது நடக்கப்போவது என்று நினைத்தேனோ அது இப்ப நடக்க போகுது: 'டிமாண்டி காலனி 2' டிரைலர்..!

அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'டிமான்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து

அப்பா ஆனார் யூடியூபர் இர்பான்.. முன்கூட்டியே கொண்டாட்டம் நடத்திய அதே குழந்தை தான்..!

பிரபல யூடியூபர்  மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான இர்பானுக்கு  குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அடி அடி அடி ஓங்கி அடிச்சிடுடா.. தளபதி விஜய் வெளியிட்ட 'அந்தகன்' ஆன்ந்தம்..!

பிரசாந்த் நடித்த 'அந்தகன்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலை தளபதி விஜய் வெளியிடுவதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

'விடாமுயற்சி' படப்பிடிப்பு முடிந்து சென்னை கூட வரவில்லை.. அதற்குள் ரூ.9 கோடி செலவு செய்த அஜித்..!

கடந்த சில வாரங்களாக அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தது என்பதும் அஜித், அர்ஜுன், ஆரவ், த்ரிஷா உள்பட பலர் இந்த படப்பிடிப்பில்