தினேஷ் உடன் குத்துச்சண்டை.. தோல்வி அடைபவர் நாமினேஷன்.. செம்ம ட்விஸ்ட் அளித்த பிக்பாஸ்..!

  • IndiaGlitz, [Monday,January 01 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் இதில் சிக்குபவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் அந்த வாரத்தில் இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில் இரண்டாவது புரமோவில் நாமினேஷன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

குத்துசண்டை களத்தில் தினேஷ் இருக்கும் நிலையில் அவருடன் யாராவது ஒருவர் மோத வேண்டும் என்றும், அதில் யார் நாக்கவுட் செய்யப்படுவார்களோ அவர் நாமினேஷன் செய்யப்படுவார் என்று பிக் பாஸ் அறிவிக்கிறார். இதனை அடுத்து விஷ்ணு, தினேஷுடன் மோதுபவர் யார் என்று கேட்கிறார்.

அப்போது மணியை மாயா கூற, விஜய் வர்மா விசித்திராவை கூறுகிறார். இதனை அடுத்து குத்துச்சண்டை நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென இந்த வாரம் எல்லாம் நாமினேட் செய்யப்படுவதாக பிக் பாஸ் அறிவிக்கிறார். விஷ்ணு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் அவர் மட்டும் நாமினேஷனில் இல்லை. இந்த பிராங்க் விளையாட்டை பிக் பாஸ் போட்டியாளர்கள் ரசித்து கைதட்டி சிரிப்பதோடு இந்த புரமோ முடிவுக்கு வந்தது.

மொத்தத்தில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஞாயிறு அன்று இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நடிகை  ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம்.. மாப்பிள்ளை பிரபல தயாரிப்பாளர்.. திருமண தேதி இதுதான்..!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

புத்தாண்டில் ஒரு சர்ப்ரைஸ்.. 'GOAT' படத்தின் சூப்பர் அப்டேட்டை தெரிவித்த வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'GOAT' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த போஸ்டர் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது

'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜயகாந்துக்கு பதில் யார்? விஜய் மில்டன் கூறுவது என்ன?

இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் தற்போது 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜயகாந்தை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டு

விஜய் ஒன்றும் அஜித்தோ, மகேஷ்பாபுவோ அல்ல.. ரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு..!

விஜய் ஒன்றும் அஜித்தோ, அல்லது மகேஷ்பாபுவோ என்றும் ஹாலிவுட் ரீமேக் படத்திற்கு அவர் செட்டாக மாட்டார் என்றும் அவருக்கேற்ற தெலுங்கு ரீமேக் படத்தை எடுக்கவும் என்றும் இயக்குனர் வெங்கட்

இவர்தான் டைட்டில் வின்னர்.. அடித்து சொல்லும் மாயா-பூர்ணிமா.. அதிர்ச்சியுடன் கேட்கும் விசித்ரா..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து விட்ட நிலையில்  இன்னும் ஒரே வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். ஏற்கனவே விஷ்ணு இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில்