எவிக்சனில் திடீர் திருப்பம்: மக்களின் வாக்குகளை மாற்றி அமைக்கும் சக்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் படலம் நேற்று தொடங்கிய நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எட்டு பேர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி கேப்டன் என்பதால் அவரது பெயர் நாமினேஷன் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மீதி ஏழு பேர்களான சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரில்லா மற்றும் ஆஜித் ஆகியோர்கள் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இவர்களில் சனம்ஷெட்டியை மட்டும் 11 பேர் நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் திடீரென எவிக்சன் பிராஸசில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் இதுகுறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பிக்பாஸ் சரித்திரத்தில் முதல்முறையாக மக்களின் வாக்கையை மாற்றி அமைக்கும் சக்தி எவிக்சன் ப்ரீபாஸ். இது இந்த சீசன் முழுமைக்கும் செல்லுபடியாகும். அதை கைப்பற்ற முதல் வாரத்தில் தகுதியற்ற 8 போட்டியாளர்கள் சுயநலத்தோடு ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த பிராஸஸ் என்னவென்று சரியாக புரியவில்லை என்று பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். மக்களின் வாக்கை மாற்றி அமைக்க ஒரு ஏற்பாடு என்றால் மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும் இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால்தான் இதுகுறித்து முழுமையாக புரியும் என்றும் கூறப்படுகிறது.