பிக்பாஸ் பாவனிக்கு தாலி கட்டிய அமிர்: விஜய் நடத்திய திருமணம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போதே அமீர் மற்றும் பாவனி ரெட்டி காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இந்த காதல் தொடர்ந்ததாக தெரிந்தது. மேலும் இருவரும் இணைந்து தற்போது பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருவரும் திருமணம் செய்து கொண்ட காட்சியின் புரோமோ வீடியோ ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இந்த வாரம் ’ஆஹா கல்யாணம்’ என்ற சுற்றின் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் விதவிதமான திருமண காட்சியுடன் நடனமாடும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி திருமணம் செய்வது கொள்வது போன்றும் பாவனி ரெட்டி கழுத்தில் அமீர் தாலி கட்டி மாலை அணிவிப்பது போன்ற காட்சியும் உள்ளது. நிஜத்தில் இருவருமே விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சிக்காக திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல ரசிகர்கள் இதேபோன்று நிஜத்திலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments