லவ் லெட்டர் கொடுத்த அமீரின் தலையில் அடித்த பாவனி: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ரெட்டி காதலிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அமீர் கொடுத்த லவ் லெட்டரை திரையில் காண்பிக்க முயற்சிக்கும்போது அமீர் அதை தடுக்க, அப்போது பாவனி, அமீரின் தலையில் செல்லமாக அடிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே பாவனி ரெட்டியை அமீர் காதலிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு பாவனி ரெட்டி சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இருவரும் நட்பாக பழகி வருகின்றனர் என்பதும் தற்போது பிபி ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக நடனம் ஆடி வருகிறார்கள் என்பதும் இந்த ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமீர் - பாவனி குறித்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு லெட்டரை அமீர் கொடுக்க அதைப் பார்த்தவுடன் அமீரின் தலையில் செல்லமாக பாவனி ரெட்டி அடிக்கிறார். அதனை அடுத்து அந்த லெட்டரில் என்ன எழுதி இருக்கிறது என்பதை கேமராவில் காட்ட பாவனி முற்படும்போது, அமீர் அதை தடுக்க, இருவரும் செல்ல சண்டை போடுகின்றனர். அமீர் அந்த லட்டரில் தனது காதலை மீண்டும் வெளிப்படுத்தி இருப்பார் என்று கூறப்படுகிறது.
#Pavni pic.twitter.com/MmLj3Fafbh
— Chico (@Chico137644411) June 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com