ஒரு வயதில் அப்பா மரணம், அம்மா கொலை: பிக்பாஸ் அமீர் கடந்து வந்த முட்பாதைகள்!
- IndiaGlitz, [Saturday,December 18 2021]
ஒரு வயதில் அப்பாவை இழந்து, பத்தாம் வகுப்பு படிக்கும்போது அம்மாவை இழந்து, அனாதை இல்லத்தில் படித்து தற்போது நல்ல நிலைக்கு வந்திருக்கும் பிக்பாஸ் அமீரின் கடந்து வந்த முட்பாதைகள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டுகார்ட் போட்டியாளராக வந்து தற்போது சிறப்பாக விளையாடி கொண்டிருப்பவர் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரது கடந்தகால வாழ்க்கை குறித்த தகவல்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன
அமீர் ஒரு வயதாக இருக்கும் போது அவரது தந்தை காலமாகி விட்டார். அதன் பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவரது அம்மா கொலை செய்யப்பட்டு விட்டார். எனவே பள்ளி பருவத்திலேயே அவர் சுடுகாட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கு யாருடைய ஆதரவும் இல்லாமல் அலைந்துள்ளார்.
அதன் பின்னர் ஒரு சிறிய எந்தவிதமான வசதியும் இல்லாத குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். அதன்பின்னர் அனாதை இல்லத்தில் சேர்ந்து படித்து வந்த அமீர், பிரபுதேவாவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக நடனத்தில் தனது கவனத்தை செலுத்தி, சொந்த ஊரிலேயே ஒரு நடன பள்ளியை தொடங்கினார். பல்வேறு நடனப் போட்டிகளில் பங்கு கொண்டார் என்பதும் குறிப்பாக கிங்ஸ் ஆப் டான்ஸ், அமெரிக்காவில் நடந்த சர்வதேச ஹிப்ஹாப் சாம்பியன்ஷிப் உள்பட பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் பரிசுகளையும் குவித்துள்ளார்
அமீருக்கு இராணுவத்தில் சேர வேண்டும் என்பது தீராத ஆசை. தேசியக்கொடியின் டாட்டூ கூட அவரது கையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாவை ஒரு வயதில் இழந்து பதினைந்து வயதில் அம்மாவை இழந்து, அனாதை இல்லத்தில் படித்து, நடனத்தில் வெறியாக இருக்கும் அமீர், இன்று நல்ல நிலையில் இருந்தாலும், அவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமான ஒரு முட்பாதை என்பதை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.