தாயாக வேண்டும் என்ற ஆசை.. பிக்பாஸ் அக்சயா கூறிய நெகிழ்ச்சியான அனுபவம்..!
- IndiaGlitz, [Monday,October 16 2023]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அக்சயா தாயாக வேண்டும் என்ற ஆசை குறித்தும், இதுகுறித்து தான் நடித்த அனுபவம் குறித்து விளக்கியுள்ளது உருக்கமாக இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் அக்சயா. இவர் கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்கிறார் என்றும் எதிலும் பெரிதாக தலையிடுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய தாய் அனுபவத்தை அவர் குறிப்பிடுகிறார். அக்சயா கர்ப்பம் ஆவது போன்றும், தனது கணவனை பார்த்து சந்தோஷம் அடைவது போன்றும், பிறக்கப் போகும் குழந்தைக்காக உடை முதல் ஷூக்கள் வரை வாங்கி வைப்பது போன்றும், ஆனால் திடீரென ஏற்பட்ட ஒரு சின்ன விபத்தால் கர்ப்பம் கலைவது போன்றும் நடித்த அனுபவத்தை அக்சயா உருக்கமாக கூறுகிறார்.
சின்னத்தாய் அவள் என்ற பாடலை கேட்டதில் இருந்து தாயாக வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அந்த ஆசை நிராசையானது குறித்து அவர் கூறுவதை சக போட்டியாளர்கள் உருக்கத்துடன் கேட்கும் காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்சயாவும் தனது பங்கிற்கு விளையாட தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.