தாயாக வேண்டும் என்ற ஆசை.. பிக்பாஸ் அக்சயா கூறிய நெகிழ்ச்சியான அனுபவம்..!

  • IndiaGlitz, [Monday,October 16 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அக்சயா தாயாக வேண்டும் என்ற ஆசை குறித்தும், இதுகுறித்து தான் நடித்த அனுபவம் குறித்து விளக்கியுள்ளது உருக்கமாக இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் அக்சயா. இவர் கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்கிறார் என்றும் எதிலும் பெரிதாக தலையிடுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய தாய் அனுபவத்தை அவர் குறிப்பிடுகிறார். அக்சயா கர்ப்பம் ஆவது போன்றும், தனது கணவனை பார்த்து சந்தோஷம் அடைவது போன்றும், பிறக்கப் போகும் குழந்தைக்காக உடை முதல் ஷூக்கள் வரை வாங்கி வைப்பது போன்றும், ஆனால் திடீரென ஏற்பட்ட ஒரு சின்ன விபத்தால் கர்ப்பம் கலைவது போன்றும் நடித்த அனுபவத்தை அக்சயா உருக்கமாக கூறுகிறார்.

சின்னத்தாய் அவள் என்ற பாடலை கேட்டதில் இருந்து தாயாக வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அந்த ஆசை நிராசையானது குறித்து அவர் கூறுவதை சக போட்டியாளர்கள் உருக்கத்துடன் கேட்கும் காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்சயாவும் தனது பங்கிற்கு விளையாட தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

More News

ஜோவிகாவுக்கு ஆதரவாக பேசிய பவா செல்லத்துரை.. திடீரென மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா மற்றும் ஜோவிகா ஆகியோர் இடையே படிப்பு சம்பந்தமான பிரச்சினை வந்தபோது ஜோவிகாவுக்கு ஆதரவாக பவா செல்லதுரை பேசினார். அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில்

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 24 கேரட் தங்க ஐபோனை தொலைத்துவிட்டேன்.. கவலையில் பிரபல நடிகை..!

24 கேரட் தங்கத்தால் ஆன ஐபோனை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொலைத்துவிட்டேன் என்றும், அதை கண்டுபிடித்து கொடுக்க ரசிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில்

மிருணாள் தாக்குர் செம்ம லிப்லாக்.. 'ஹாய் நான்னா' டீசர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவான 'ஹாய் நான்னா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியானதோடு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

நிறைவடையும் நிலையில் 'D50' .. 'D51' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்.!

தனுஷ் நடித்து இயக்கி வரும் 'D50' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

'என்னங்க இப்படி பண்ணிட்டிங்க'.. மாயாவை செம்மையாக கலாய்த்த கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் பிரதீப் அந்தோணி சேவ் செய்யப்பட்டார் என்று கமல்ஹாசன் கூறியவுடன் பொதுமக்கள் கைதட்டினர். உடனே 'என்னங்க இப்படி செஞ்சிட்டீங்க'