உடம்பு முழுவதும் பேண்டேஜ்.. என்ன ஆச்சு இந்த நடிகைக்கு? 

  • IndiaGlitz, [Thursday,November 10 2022]

பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியின் போட்டியாளரும் தொலைக்காட்சி நடிகையுமான உர்ஃபி ஜாவித் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்

சமீபத்தில் கூட அவர் தீபாவளி வாழ்த்து கூறும் போது அரை நிர்வாண கோலத்தில் வாழ்த்து கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி வெறும் வாட்சுகளை மட்டுமே ஆடையாக அணிந்த வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவர் அணிந்திருந்த நூல் போன்ற மேலாடையை பார்த்து நெட்டிசன்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் அவர் திடீரென பேண்டேஜ்களால் ஆன உடையை அணிந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது. தன்னுடைய 4 மில்லியன் ஃபாலோயர்களுக்காக இன்னும் என்னென்ன புதுமையான வீடியோக்களை வெளியிடுகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.