கணவருடன் சென்று பாஜகவில் இணைந்த பிக்பாஸ் தமிழ் நடிகை.. அண்ணாமலையுடன் புகைப்படம்..!
- IndiaGlitz, [Tuesday,April 09 2024]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் காமெடி நடிகை தனது கணவருடன் சென்று பாஜகவில் இணைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகில் உள்ள பலர் அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பதும் தேர்தல் நேரத்தில் மேலும் சிலர் அரசியல் கட்சிகளின் சேர்ந்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளருமான நடிகை ஆர்த்தி இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார். அப்போது அவரது கணவர் கணேஷ் என்பவரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நடிகை ஆர்த்தி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார் என்பதும் அவரது மறைவிற்கு பின் அதிமுகவிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகி இருந்த நடிகை ஆர்த்தி இன்று திடீரென அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இதனை அடுத்து அவர் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.