விஜய் பிறந்த நாளுக்காக பிக்பாஸ் நடிகை வரைந்த ஓவியம்.. நெட்டிசன்கள் ரியாக்சன் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நேற்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் விஜய்யை தனது கையால் ஓவியம் வரைந்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விஜய்யின் பிறந்தநாளுக்கு தனது அன்பு பரிசு என்றும் பிளடி ஸ்வீட் விஜய் அவர்களுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை வரைய அவர் எடுத்துக்கொண்ட முயற்சி பெரிது என்றாலும் அது நெட்டிசன்களால் தற்போது கேலியும் கிண்டலும் செய்யப்பட்டு வருகிறது.
விஜய் மாதிரியே இல்லை என்றும் விஜய் மேல் அவருக்கு என்ன கோபம் என்றும் கமெண்ட்களில் பதிவாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் விஜய்யை வரைய அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்கு சனம் ஷெட்டி தனது அடுத்த பதிவில் கூறியபோது ’என்ன மக்களே ஒரு ஓவியத்திற்கு இவ்வளவு ரியாக்ஷனா? வைரல் ஆக்கிட்டீங்களே? ஆனா விஜய் சார் ரசிகையாக இந்த கிண்டலுக்கு எல்லாம் பீல் பண்ண மாட்டேன். விஜய் அவர்கள் தனது வாழ்க்கையில் சந்தித்த கேலி கிண்டலை ஒப்பிடும்போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை. அனைத்து விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன, சோ சில் பண்ணுங்க என்று ஜாலியாக பதிவு செய்துள்ளார்
Small gift with big love to our lovable Thalapathy 🌟
— Sanam Shetty (@ungalsanam) June 22, 2023
Have a bloody sweet Birthday @actorvijay sir 🎂 #HBDThalapathy #Vijay #mynewsketch #samstrokes#LeoFirstLook #LeoSecondLook #ThalapathyBirthday pic.twitter.com/cu3cZKYP5Q
Enna makkale oru sketch ku ivlo reaction uh?
— Sanam Shetty (@ungalsanam) June 23, 2023
Viral akiteengale!
Ana Vijay sir fan ah irundhu indha trolls ku ellam feel pannave matein.
This is nothing compared to what @actorvijay has faced and overcome!
All opinions are welcome.
So chill panunga (adutha sketch varai😉)… pic.twitter.com/3g65AGlCjh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com