நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்.. பிக்பாஸ் நடிகையின் சாட்டையடி பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாரா சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த பின் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்று தான் இந்த முடிவை எடுத்திருப்பார்கள். ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க இது குறித்த கேள்விகளே அதிகம் அமைச்சரிடம் கூட கேட்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த விவகாரத்தை வைத்து யூடியூபில் பலர் வீடியோக்கள் வெளியிட்டு பணம் சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டனர். ஒருசில ஊடகங்களும் இந்த செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் நயன்தாரா விவகாரம் குறித்து குற்றம் சாட்டி பதிவு செய்து வருபவர்களுக்கு பிக்பாஸ் நடிகை ரேஷ்மா தனது டுவிட்டர் பக்கத்தில் சாட்டையடி பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியபோது, ‘இந்த உலகில் அடுத்தவர்களுக்காக யாரும் சந்தோஷப்படுவது இல்லை, ஆனால் அடுத்தவர்களை குற்றம் சாட்டுவது, அதன்மூலம் சந்தோஷப்படுவது, அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இன்பம் காணுவது ஆகிய கொடூரம் தான் தற்போதைய உலகில் நடைபெறுகிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்
நடிகை ரேஷ்மா யாருடைய பெயரையும் தனது பதிவில் குறிப்பிடவில்லை என்றாலும் நயன்தாராவை விமர்சனம் செய்தவர்களுக்கு தான் மறைமுகமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் ரேஷ்மாவின் இந்த பதிவிற்கு நடிகை வனிதா விஜயகுமார் ’ரேஷ்மா கூறியது மிகவும் சரியானது’ என்று கூறி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
Rightly analysrd @reshupasupuleti #kaliyugam https://t.co/qxH7oApi2s
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com