5வது முறையாக விவாகரத்து செய்த பிக்பாஸ் நடிகை: ஒரே ஆண்டில் முறிந்த 2 திருமணங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஒருவர் நான்கு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில் கடந்த ஆண்டு ஐந்தாவதாக செய்த திருமணத்தையும் முறித்துக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். 54 வயதான இவர் ஏற்கனவே கடந்த 2006, 2007 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் திருமணம் செய்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸ் என்பவரை 4வது முறையாக திருமணம் செய்தார்.
இந்த திருமணத்தை 12 நாட்களில் முறித்துக் கொண்ட பமீலா, அதே ஆண்டில் டிசம்பர் மாதம் தனது பாதுகாவலர் டேன் ஹேய்ஹர்ஸ்ட் என்பவரை ஐந்தாவது திருமணம் செய்தார். இந்நிலையில் தனது ஐந்தாவது கணவரையும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது தாயாரின் விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த பமிலா ஆண்டர்சனின் மகன்கள், ‘இனி எங்கள் அம்மா எங்களுடனே இருப்பார் என்றும் அவருடன் நாங்கள் வசிப்பதையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் ’பே வாட்ச்’ உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார் என்பதும் தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments