யானையுடன் 'பீஸ்ட்' ஜாலியோ ஜிம்கானோ பாடலுக்கு நடனமாடிய நடிகை!

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே .

இந்த படத்தில் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் இரண்டு பாடல்களுமே உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளியான ’ஜாலியோ ஜிம்கானா’ பாடல் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது .

இந்த பாடலுக்கு அரபிக்குத்து பாடல் போலவே பல திரையுலக பிரபலங்கள் ஆடிய நடன வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. இந்த நிலையில் தாய்லாந்து சுற்றுப் பயணம் சென்றுள்ள நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஜனனி அய்யர், தாய்லாந்து யானையுடன் ’ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் .

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பதும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.15 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறியது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் போட்டியில் இருந்து ஒருவர் வெளியேற பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. ரூபாய் 3 லட்சத்திலிருந்து ஆரம்பித்த

சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் அபிராமி: என்ன காரணம்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்புவிடம் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தனுஷூடன் மீண்டும் இணைந்த 'அசுரன்' நடிகர்!

தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் மீண்டும் தனுஷின் 'வாத்தி' படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிவகார்த்திகேயன் பல உண்மைகளை மறைத்துவிட்டார்: பதில் மனு தாக்கல் செய்த ஞானவேல்ராஜா!

 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் நடித்ததற்காக ரூபாய் 4 கோடி சம்பள பாக்கி இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்த நிலையில்

சினேகன் மனைவியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்: அதிர்ச்சி அடைந்த ரசிகர்களுக்கு உண்மையை சொன்ன கன்னிகா!

நடிகரும் பாடல் ஆசிரியருமான சினேகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில் கன்னிகாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்