நடிகர் சித்தார்த் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன்: பிக்பாஸ் தமிழ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சித்தார்த் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன் என பிக்பாஸ் தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் சென்றிருந்தபோது பாதுகாப்பு குறைபாடு காரணமாக அவர் திரும்பிச் செல்ல நேரிட்டது என்பதும் இது குறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்துக்கு நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்தார்த்தின் இந்த சர்ச்சை டுவிட் குறித்து நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது:
இது போன்ற கேவலமான ட்வீட்கள் குறிப்பாக ஒரு நடிகரிடமிருந்து வருவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. அவரது வரவிருக்கும் திரைப்பட விளம்பரத்திற்காக வெறும் 5 நிமிட புகழ்காக. பிரதமரின் பாதுகாப்பு, தேசிய ஜாம்பவான்களை கேலி செய்யும் பிரபல நடிகர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன்.
முதல்வர் ஸ்டாலின் இந்த ட்வீட்டுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிரதமரின் பாதுகாப்பு என்பது நகைச்சுவை அல்ல. இதை நடிகர் சங்கமும் கண்டிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய பிராண்டுகள் கூட இதை கண்டிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது அல்லது அப்படிப்பட்டவர்களை திமுக பாதுகாத்து ஊக்கப்படுத்துகிறது என்றால் இதை திமுக நோக்கமாகவும் பார்க்கிறேன்.
பிரதமரின் பாதுகாப்பு குறித்து மூன்றாவது நபரை கூற வைப்பது இதற்கு திமுக பதில் சொல்ல வேண்டும்.. இதுபோன்ற ட்வீட்களுக்கு திமுக பொறுப்பேற்கப்படும். தெலுங்குத் துறையும் தமிழ் துறையும் அவரது படங்களைத் தடை செய்ய வேண்டும். இது நிச்சயமாக இரட்டை அர்த்த ட்வீட்’ என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கேவலமான ட்வீட்கள் குறிப்பாக ஒரு நடிகரிடமிருந்து வருவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. அவரது வரவிருக்கும் திரைப்பட விளம்பரத்திற்காக வெறும் 5 நிமிட புகழ்காக. பிரதமரின் பாதுகாப்பு, தேசிய ஜாம்பவான்களை கேலி செய்யும் பிரபல நடிகர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன். pic.twitter.com/HNitSICC1d
— Gayathri Raguramm ?????? (@BJP_Gayathri_R) January 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com