பிக்பாஸ் நடிகைக்கு ஆண் குழந்தை: ரசிகர்களின் வாழ்த்துமழை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் நடித்த ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் நடிகை மதுமிதா. இந்த படத்தில் அவர் ஜாங்கிரி என்ற கேரக்டரில் நடித்ததால் ஜாங்கிரி மதுமிதா என்று அழைக்கப்பட்டார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்த மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் திடீரென அவர் கையை அறுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகை மதுமிதாவுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மோசஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. சமீபத்தில் மதுமிதா கர்ப்பம் ஆனார் என்பதும் அவருடைய வளைகாப்பு புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
We want your blessings ?????? tq tq tq?????? pic.twitter.com/Bx9IqQZ5US
— Moses Joel (@madhumithamoses) May 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments