உங்க மேல இருந்த மரியாதையே போயிருச்சு.. பிகினியில் பிக்பாஸ் நடிகை.. குவியும் கண்டனங்கள்..!

  • IndiaGlitz, [Friday,September 13 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை திடீரென பிகினியில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கண்டனங்கள் குவிந்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நமிதா மாரிமுத்து. திருநங்கை ஆன இவர் பேஷன் ஷோ, மாடலிங் துறையில் பிரபலம் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த ’நாடோடிகள்’ திரைப்படத்தில் இவர் ஒரு கேரக்டரில் நடித்து பாடல் ஒன்றையும் பாடியிருந்தார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் என்பதும் ஆனால் திடீரென அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டது என்பதும், அவர் விலகியதற்கு என்ன காரணம் என்பது இன்று வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நமிதா மாரிமுத்து சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களையும் கொண்டு உள்ளார். அவ்வப்போது கிளாமர் புகைப்படம் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் நிலையில் திடீரென பிகினி உடையில் படு கிளாமராக இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோவுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் ’இந்த ஜெனரேஷன் குழந்தைகள் அதிகமாக இன்ஸ்டாகிராம் பார்க்கிறார்கள், இப்படியான வீடியோ வெளியிட வேண்டாம் என்றும் அறிவுரை வருகின்றனர். மேலும் உங்கள் மீது இருந்த மரியாதையே போய்விட்டது என்பது போன்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த வீடியோ சூப்பராக இருக்கிறது என்று வாழ்த்துக்களும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.