மலைக்கு போய் விட்டு வந்ததும் மனைவியிடம் முத்தம் பெற்ற மகத்!

  • IndiaGlitz, [Sunday,January 03 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான மகத், சமீபத்தில் சிம்புவுடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபாடு செய்தார் என்பதும் அதன் பின்னர் காசிவிசுவநாதன் கோவிலில் இருவரும் சுவாமி தரிசனம் செய்த புகைப்படம் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சபரிமலை, காசி உள்பட பல ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு சமீபத்தில் இருவரும் சென்னை திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று ’ஈஸ்வரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆன்மிக சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்ற மகத் மனைவியிடம் முத்தம் வாங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது. மகத்தின் மனைவி பிராச்சி தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த முத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் புத்தாண்டு குறித்து பிராச்சி தேசாய் கூறியதாவது: 2021 ஆம் ஆண்டில் அன்பு மற்றும் மகிழ்ச்சி மட்டுமே இருக்கவேண்டும் என்றும், அன்பு, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் நிறைவான ஒரு வருடமாக இருக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார்.