சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் அபிராமி: என்ன காரணம்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்புவிடம் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இது குறித்து அபிராமி கூறும்போது ’எனக்கும் மற்றவர்களுக்கும் நிறைய விவாதங்கள் நடந்தன. இந்த விவாதத்தில் ஒருசிலருக்கு பேசுவதற்கு பாயிண்ட் இல்லாததால் சனிக்கிழமை சிம்பு சொன்னார்கள் என்று மாற்றி மாற்றி சொல்லி கொண்டிருந்தார்கள். அப்போது நான் சில கருத்துக்களை கூறினேன். அது சிம்புவை அவமரியாதை படுத்தியதாக யாராவது நினைத்துக் கொண்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிம்புவை அவமரியாதை படுத்த வேண்டும் என்றும் அவரை இழிவுபடுத்த வேண்டுமென்ற எண்ணம் எனக்கு கிடையாது.

நான் சிம்பு மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர்தான் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். எனவே சிம்புவை நான் அவமரியாதையாக பேசியதே கிடையாது. ஒருவேளை நான் அவரை அவமதித்ததாக யாராவது நினைத்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அபிராமி கூறியுள்ளார்.