மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிக்பாஸ் அபினய்? அவரே அளித்த விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான அபினய், தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் நடிகையர் திலகம், சாவித்ரியின் பேரனான அபினய், பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபினய், இந்த நிகழ்ச்சி தனக்கு மிகப்பெரிய அனுபவத்தை தந்தது என்பதும் 100 நாட்களுக்கு மேல் அந்த வீட்டில் இருந்தது தனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார் .
மேலும் தனது மனைவி அபர்ணா வரதராஜனை விவாகரத்து செய்யப் போவதாக வெளிவந்திருக்கும் செய்தியால் தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் தானும் தனது மனைவியும் மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இதுபோன்ற ஆதாரம் இல்லாத செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து அபினய்-அபர்ணா விவாகரத்து என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout