மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிக்பாஸ் அபினய்? அவரே அளித்த விளக்கம்!

  • IndiaGlitz, [Tuesday,March 01 2022]

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான அபினய், தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் நடிகையர் திலகம், சாவித்ரியின் பேரனான அபினய், பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபினய், இந்த நிகழ்ச்சி தனக்கு மிகப்பெரிய அனுபவத்தை தந்தது என்பதும் 100 நாட்களுக்கு மேல் அந்த வீட்டில் இருந்தது தனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார் .

மேலும் தனது மனைவி அபர்ணா வரதராஜனை விவாகரத்து செய்யப் போவதாக வெளிவந்திருக்கும் செய்தியால் தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் தானும் தனது மனைவியும் மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இதுபோன்ற ஆதாரம் இல்லாத செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து அபினய்-அபர்ணா விவாகரத்து என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


More News

அஜித்தின் 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

அஜீத் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'வேதாளம்' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இனிய நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல், ரஜினி!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் இனிய நண்பராக இருந்து வரும் நிலையில் முதல்வருக்கு தங்களது வாழ்த்துக்களை

ரூ.500 கோடி பட்ஜெட் 3டி படத்தில் பிரபாஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபாஸ் நடிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறை கைதிகளைத் திடீரென விடுவிக்கும் உக்ரைன் அதிபர்… என்ன காரணம்?

போர் அனுபவம் கொண்ட உக்ரைன் நாட்டு சிறைகைதிகள் தற்போது

ஒரு காரில் 91 நாடுகளை சுற்றிவந்த இளம் தம்பதி… வியக்க வைக்கும் தகவல்!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி கடந்த 12 ஆண்டுகளாக