பிக்பாஸ் அபிஷேக் இரண்டாம் திருமணம்.. மணமகள் யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,June 03 2024]

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் யூடியூபர் அபிஷேக் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் அபிஷேக், 35 வது நாளில் வெளியேறினார் என்பதும் அதன் பின்னர் 48வது நாளில் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த நிலையில் மீண்டும் அவர் 63வது நாளில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் அபிஷேக், தீபா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பற்றி தெரிந்து விட்டனர். இதனை அடுத்து பிக்பாஸ் அபிஷேக் இரண்டாவது திருமணம் செய்ய போவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது அவர் தான் காதலித்து வந்த சுவாதி நாகராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.