பிக்பாஸ் அபிஷேக்கின் முகத்திரையை கிழித்த முன்னாள் மனைவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி, தனது முன்னாள் கணவரிடம் அடிவாங்கியதாகவும், கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் அளித்த பேட்டியின் வீடியோ வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக தங்களுடைய சொந்தக் கதை சோகக் கதையைக் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ராஜா தன்னுடைய வாழ்க்கை கதையை கூறியபோது தன்னுடைய திருமணம் குறித்தும் கூறியிருந்தார். 
மேலும் தான் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் ஒரு தவறான ஆளாக இல்லாமல் இருந்திருப்பேன் என்றும், என் அப்பாவை காப்பாற்றி இருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் தனது திருமண விவாகரத்திற்கான காரணத்தை அவர் சொல்லாமல் மறைத்துவிட்டார்.

இந்த நிலையில் அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில், ‘தனது முன்னாள் கணவர் கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருமுறை கணவர் அடிப்பதற்கு நாம் அனுமதித்து விட்டால் அதன் பிறகு அவர் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருப்பார் என்றும் அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எனவே முதல்முறையாக அடிக்கும்போதே, அடிப்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். 

மனைவியை கைநீட்டி அடித்து விட்டு அதன் பிறகு மன்னிப்பு கேட்டாலும் அந்த நபர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் அடிக்கத்தான் செய்வார் என்றும் எனவே அடிவாங்கும் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதே சரியான வழி என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

மனைவியை கைநீட்டி அடித்ததால் தான் தனக்கு விவாகரத்து நடந்தது என்ற உண்மையை மறைத்த அபிஷேக்கை நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.