என்னங்க சார் உங்க நியாயம்: பாஜகவினர்களுக்கு பிக்பாஸ் ஆர்த்தி கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைச்சுவை நடிகையும் பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவருமான ஆர்த்தி தனது சமூக வலைதளத்தில் அவ்வப்போது அரசியல் நையாண்டி கருத்துக்களை கூறி வரும் நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் டிரெண்டில் உள்ள 'மெர்சல்' பட விவகாரம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
2.5 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் உங்களுக்கு பிடிக்காத காட்சியை நீக்க சொல்லி நீக்கவும் வைக்கிறீங்க. ஆனால் ஐந்து வருடம் ஆளுகிற எங்களுக்கு பிடிக்காத எம்பியும், எம்.எல்.ஏவும் நீக்க சொன்ன எங்களை தேச விரோத சக்திகள் என்று சொல்லுறீங்க, என்னங்க உங்க நியாயம் என்று ஆர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்த்தியின் இந்த பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி பேசினால் உங்கள் வீட்டிலும் ரெய்டு வந்துட போறாங்க என்று ஒரு ரசிகரின் கமெண்டுக்கு 'எங்க வீட்டுல 'பிம்பிளிக்கி பியாமி'தான் என்று தனது பாணியில் ஆர்த்தி கூறியுள்ளார்.
— Actress Harathi (@harathi_hahaha) October 24, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com