வரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு?

  • IndiaGlitz, [Tuesday,January 19 2021]

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி என்பதும் அவருக்கு டைட்டில் வின்னர் பரிசாக ரூ.50 லட்சம் கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு பரிசுத் தொகை மற்றும் பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்ததற்கான சம்பளம் ஆகியவை இரண்டும் சேர்த்து வரிப்பிடித்தம் போக மொத்தம் எவ்வளவு தொகை கிடைத்திருக்கிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களில் ஆரிக்கு தினமும் ரூபாய் 85 ஆயிரம் சம்பளம் என ஒப்பந்தம் பேசப்பட்டு இருந்ததாகவும், இதனை அடுத்து அவர் 105 நாட்கள் இருந்ததால் அவருடைய மொத்த சம்பளம் 89 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும் என தெரிகிறது. இதில் 30 சதவீதம் வரிப்பிடித்தம் போக 62 லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் அவருக்கு சம்பளமாக கிடைக்கும்

அதேபோல் அவருக்கு கிடைத்த 50 லட்சம் ரூபாய் டைட்டில் வின்னர் பரிசில் 30% வரிப்பிடித்தம் போக 35 லட்சம் கிடைத்துள்ளது. எனவே சம்பளம் மற்றும் டைட்டில் வின்னர் பரிசு ஆகியவை சேர்த்து ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை வரி பிடித்தம் போக ரூபாய் 97 லட்சத்து 47 ஆயிரத்து 500 என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஆரிக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகை: வீடியோ வைரல்!

பெரியதிரை நடிகர் நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் குவிந்து உள்ளனர் என்பது தெரிந்ததே.

பொங்கல் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு… சோகச் சம்பவம்!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொருட்களோடு சேர்த்து 100 பேருக்கு கொரோனாவை விற்று சென்ற சேல்ஸ் மேன்!  பரபரப்பு சம்பவம்!

கொரோனா வைரஸின் ஆரம்ப இடமான சீனாவில் பல மாதங்களைக் கடந்து மீண்டும் சில நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி!

புகழ்பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் சமூக சேவகியுமான டாக்டர் சாந்தா அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93

சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட 22 பேர்…. 7 நாட்களுக்குப் பின் பலர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!

சீனாவின் ஷாண்டோய் மாகாணத்தில் உள்ள யான்டாய் பகுதியில் தங்கச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.