பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு உடல்நலக்குறைவா? வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆரி இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து ஆரிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டுகளை குவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவு செய்து வரும் ஆரி, தற்போது வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு உடல் நலமில்லை என்று கூறியுள்ளதால் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
இந்த வீடியோவில் ஆரி கூறியிருப்பதாவது: உங்கள் எல்லோரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன். எனக்கு உடல்நிலை சரியில்லை. டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் முதலே எனது உடல்நிலை சரியில்லாமல் உள்ளது.
விரைவில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறுவேன். பிக்பாஸ் டைட்டில் பட்டம் வென்றது என்னுடைய வெற்றி அல்ல, உங்களுடைய வெற்றி. நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் கொடுத்த வெற்றி. இதற்காக நான் என்றைக்கும் உங்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டவன்.
வெகு விரைவில் உங்களை எல்லாம் சமூக வலைதளம் மூலம் சந்திக்கின்றேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை தேர்வு செய்து அன்புடன் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோவின் கமென்ட்களில் அவரது ரசிகர்கள் ‘நீங்கள் உங்களுடைய உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும், எங்களுடைய கேள்விகளுக்கு நிதானமாக பதில் அளிக்கலாம் என்று கூறி வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com