ஓட்டு போட்டது ரியோவுக்கு, வாழ்த்து தெரிவித்தது ஆரிக்கு: நட்சத்திர ஜோடியின் பதிவு!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் இன்னும் இரண்டு நாட்களில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் டிவியின் தயாரிப்புகளில் ஒருவரான ரியோவை வெற்றி பெற வைக்க விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் பலர் முயற்சித்து வருகின்றனர் என்ற செய்தி வெளியாகி வருகிறது. மேலும் ரியோவுக்கு ஓட்டு போடுங்கள் என விஜய் டிவி பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்கள் மூலம் கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரம் போல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி தாங்களும் ரியோவுக்கு 50 வாக்குகள் போட்டதாக ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரியோவுக்கு ஓட்டு போட்டதாக ‘ராஜா ராணி’ தொலைக்காட்சி தொடர் புகழ் நட்சத்திர ஜோடிகளான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா தங்களது சமூக வலைத்தளங்களில் ஸ்கிரீன்ஷாட் மூலம் பதிவு செய்தனர் என்பதும், அவர்களுடைய பதிவு வைரல் ஆகி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரியின் புகைப்படத்தை பதிவு செய்து ’நீ கலக்கு மாமா’ என்று கூறியுள்ளார். இதிலிருந்து அவர் ஆரிதான் டைட்டில் வின்னர் ஆக வேண்டுமென்று விரும்பியது போல் தெரிகிறது. ரியோவுக்கு ஓட்டு போட்டுவிட்டு ஆரிக்கு வாழ்த்து தெரிவிக்கும் சஞ்சீவ்-ஆல்யா நட்சத்திர ஜோடியை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.,

More News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்!

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மதுரையில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரத்தில்

'மாநாடு' படத்தின் பொங்கல் ஸ்பெஷல்: எஸ்.ஜே.சூர்யாவின் மாஸ் கெட்டப்!

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான 'மாநாடு' படத்தின் பொங்கல் ஸ்பெஷல் புதிய ஸ்டில்

பணப்பெட்டியை நோக்கி செல்லும் ஆரி: பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி வாரத்தில் பணப்பெட்டி ஆப்சன் கொடுக்கப்படும் என்பதும் பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் அந்த பண பெட்டியை எடுத்துக்கொண்டு

'முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்ததா மாஸ்டர்? ஆச்சரியத்தில் திரையுலகம்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் நேற்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பது தெரிந்ததே.

நீ எப்படிடா இப்படி வளந்த..? ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்!

ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறிய ஒரே ஒரு வார்த்தையால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.