பாலாஜி தந்தை மறைவுக்கு ஆரியின் செயல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் பாலாஜியின் தந்தை நேற்று காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த தகவல் அறிந்த பாலாஜியின் ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜியின் சக போட்டியாளர்கள் அவருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பாலாஜியின் தந்தை மறைவிற்கு சற்று முன்னர் ஆரி தனது சமூக வலைத்தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: பாலாஜி முருகதாஸின் தந்தையின் மறைவைக் கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்த கடினமான தருணங்களில் அவருடைய குடும்பத்திற்கு பலமும் தைரியமும் கிடைக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஒருவருக்கொருவர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும் இருவரிடமும் நல்ல புரிதல் இருந்தது என்பதும் இருவரும் அவ்வப்போது தங்களது தவறுக்கு ஒருவர் மற்றவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இருவரும் அவர்களாகத்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் தான் வின்னர் மற்றும் ரன்னர் பட்டத்தை வென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.