பாலாஜி தந்தை மறைவுக்கு ஆரியின் செயல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் பாலாஜியின் தந்தை நேற்று காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த தகவல் அறிந்த பாலாஜியின் ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜியின் சக போட்டியாளர்கள் அவருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பாலாஜியின் தந்தை மறைவிற்கு சற்று முன்னர் ஆரி தனது சமூக வலைத்தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: பாலாஜி முருகதாஸின் தந்தையின் மறைவைக் கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்த கடினமான தருணங்களில் அவருடைய குடும்பத்திற்கு பலமும் தைரியமும் கிடைக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஒருவருக்கொருவர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும் இருவரிடமும் நல்ல புரிதல் இருந்தது என்பதும் இருவரும் அவ்வப்போது தங்களது தவறுக்கு ஒருவர் மற்றவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இருவரும் அவர்களாகத்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் தான் வின்னர் மற்றும் ரன்னர் பட்டத்தை வென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அழகுக்கு நிறம் எதற்கு? அடர்ந்த கறுப்பில் சாதனை படைத்த ஒரு மாடல் அழகி!

அழகு என்றாலே அது வெள்ளைதான் என்ற மனப்பான்மை உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பிசிசிஐயின் புது டிரிக்… சென்னை டெஸ்ட் மேட்சில் ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்குமா?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது அங்கு நடைபெற்ற பல கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு சமூக இடைவெளியோடு அனுமதி வழங்கப்பட்டது.

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த ரிஹானவை 'முட்டாள்' என கூறிய இந்திய நடிகை

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹாலிவுட் நடிகை ரிஹானாவை 'முட்டாள்'

இன்று முதல் இசைஞானியின் புது ஸ்டுடியோ: முதல் பாடல் யாருக்கு தெரியுமா?

இசைஞானி இளையராஜா கடந்த பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு ஸ்டூடியோ அமைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென

'மாநாடு' படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்