பிக்பாஸ் கேப்ரில்லாவுடன் காதலா? ஆஜித் சொன்ன பதிலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Tuesday,October 04 2022]
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் ஆஜித் மற்றும் கேப்ரில்லா என்பதும் இவர்கள் இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருப்பதை பார்த்து காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதுபற்றி கேள்விக்கு ஆஜித் கூறிய பதில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் கிசுகிசு கிளம்புவதுண்டு. முதல் சீசனில் ஓவியா-ஆரவ், இரண்டாவது சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா, நான்காவது சீசனில் பாலாஜி-ஷிவானி, ஐந்தாவது சீசனில் அமீர்-பாவனி ரெட்டி ஆகியோர் காதலித்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட ஆஜித் மற்றும் கேப்ரில்லா ஆகிய இருவரும் காதலர்கள் என்று கூறப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித் பாட்டு பாடி சக போட்டியாளர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் திருப்தி செய்து சுமார் 100 நாட்களுக்கும் மேல் இந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடித்தார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்ரில்லா புத்திசாலித்தனமாக விளையாடினார் என்பதும், அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் இணைந்து கொண்டு அவர் தன்னை பல நேரங்களில் எவிக்சனில் இருந்து காப்பாற்றிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே கேப்ரில்லா-ஆஜித் ஆகிய இருவருக்கும் காதல் உண்டானதாக கிசுகிசு கிளம்பியது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் கூட இருவரும் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோக்களும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேப்ரில்லாவுடன் காதலா என்ற கேள்விக்கு சமீபத்தில் மனம் திறந்து பதில் கூறிய ஆஜித், ‘பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நாங்கள் இருவரும் அதிக அளவு சண்டை போட்டோம். ஆனால் டிவியில் ஒரு சண்டையை கூட காட்டவில்லை. சண்டை போட்டாலும் உடனே நாங்கள் சேர்ந்து விடுவோம். எங்கள் இருவருக்கும் எப்போதும் காதல் உண்டானதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை தான் பழகி வருகிறோம் என்றும் தெரிவித்தார். அவருடைய இந்த பதில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.