'நீங்க ஷட்டப் பண்ணுங்க' ஓவியாவின் வசனத்தை சொல்லி சண்டை போடும் வனிதா-மதுமிதா
Send us your feedback to audioarticles@vaarta.com
அபிராமி குறித்து மதுமிதா கூறிய ஒரு சர்ச்சைக்குரிய கருத்தால் பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே போர்க்களம் போல் காணப்படுகிறது. இந்த பிரச்சனையை அபிராமியே கிட்டத்தட்ட மறந்துவிட்டார். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக்கி அதில் குளிர்காயும் வனிதா, இந்த விஷயத்தை இன்னும் விடுவதாக இல்லை.
இன்றைய புரமோவில் வனிதா இதுகுறித்து மதுமிதாவிடம் வாக்குவாதம் செய்தார். ஒண்ணுமே தெரியாம ஊமைக்குசும்பா இருப்பாங்களாம், கட்டின தாலியை கழட்டி வச்சுட்டு வருவாங்களாம், இவங்க அபிராமி பாட்டிலை வச்சிருந்தா மட்டும் அதை தப்பா பேசுவாங்களாம்' என மதுமிதாவை வனிதா குத்திக்காட்ட, அதற்கு மதுமிதா, 'இதே வாய்தான அன்னிக்கு ஆமாம், அபிராமி ஓவராத்தான் போறான்னு சொல்லுச்சு என பதிலடி கொடுக்க அதற்கு பதில் கூற முடியாத வனிதா வழக்கம்போல் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் 'உன்னோட ஒப்பினியனை உன்னோட வச்சுக்க மத்தவங்கள்கிட்ட திணிக்காதே என்று கூறி 'ஷட்டப்' என்று கூற அதற்கு மதுமிதாவும் 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்று ஓவியாவின் வசனத்தை கூறினார்.
பிக்பாஸ் முதல் பாகத்தில் ஓவியா சொன்ன 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்பது சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆனது மட்டுமின்றி இளசுகள் மத்தியில் ஸ்லோகனாகவும் மாறியது. ஆனால் மதுமிதாவும், வனிதாவும் அதே வார்த்தையை பயன்படுத்தியதை பார்க்கும்போது இனிமேல் இந்த வார்த்தையை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் போல் தெரிகிறது.
நீங்க சட் அப் பண்ணுங்க..!#பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/3Y4IuNze9d
— Vijay Television (@vijaytelevision) July 2, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments