பிக்பாஸ் 3 நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒவ்வொரு வாரமும் ஒருவரை வெளியேற்ற நான்கு அல்லது ஐந்து பேர் நாமினேட் செய்யப்பட்டு அவர்களில் குறைந்த வாக்கு பெற்றவர்கள் வெளியேற்றப்படுவது வழக்கமான ஒன்றே.

அந்த வகையில் நேற்று நடந்த நாமினேஷனில் கவின், சாக்சி, சரவணன், பாத்திமா பாபு, சேரன், மீராமிதுன் மற்றும் மதுமிதா ஆகிய ஏழுபேர்கள் சிக்கியுள்ளனர் இதில் மதுமிதாவையும் மீராமிதுனையும் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நாமினேஷனில் சிக்காதவர்கள் வனிதா, ரேஷ்மா, முகன், சாண்டி, மோகன் வைத்யா ஆகிய ஐந்து பேர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டிற்கு கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் சண்டை போட்ட வனிதா நாமினேஷனில் சிக்காதது பெரும் ஆச்சரியமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று யார் யாரை நாமினேட் செய்தனர் என்பதை பார்ப்போம்.

மதுமிதா: கவின், பாத்திமா பாபு
அபிராமி: மதுமிதா, மீராமிதுன்
சாக்சி: மதுமிதா, மீராமிதுன்
கவின்: மீராமிதுன், மதுமிதா
மீராமிது: அபிராமி, சாக்சி
சாண்டி: மதுமிதா, சேரன்
சாக்சி: மதுமிதா, மீராமிதுன்
வனிதா: மீராமிதுன், சேரன்
தருண்: சாக்சி, மீராமிதுன்
லாஸ்லியா: மீராமிதுன், சரவணன்
ரேஷ்மா: மதுமிதா, பாத்திமாபாபு
சேரன்: லாஸ்லியா, தருண்
முகன்: மீராமிதுன், சேரன்
மோகன் வைத்யா: சேரன், பாத்திமாபாபு

இதில் லாஸ்லியா, தருண் ஆகிய இருவரையும் நாமினேட் செய்து அதற்காக சேரன் கூறிய காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்ப்பொண்ணு என்ற ஒரே ஒரு பிரச்சனையை கிளப்பியதால் மதுமிதா அதிக நபர்களால் நாமினேட் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

'நீங்க ஷட்டப் பண்ணுங்க' ஓவியாவின் வசனத்தை சொல்லி சண்டை போடும் வனிதா-மதுமிதா

அபிராமி குறித்து மதுமிதா கூறிய ஒரு சர்ச்சைக்குரிய கருத்தால் பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே போர்க்களம் போல் காணப்படுகிறது.

பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இந்தியா தடுத்ததாக வக்கார் யூனுஸ் புகார்

நேற்று இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி அடைந்த தோல்வி இந்தியாவை விட பாகிஸ்தானை ரொம்பவே பாதித்துள்ளது. நேற்று மட்டும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தான்

நான் இன்னும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் அபிராமி-மிராமிதுன் மோதல் பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை தந்த நிலையில் இந்த வாரத்திற்கான கண்டெண்ட் 'தமிழ்ப்பொண்ணு' கலாச்சாரம்

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை புரமோஷன் செய்யும் கிரிக்கெட் வீராங்கனை

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இயக்குனர் சங்கத்தலைவர்: பாரதிராஜா எடுத்த அதிரடி முடிவு

இயக்குனர் சங்க தலைவராக ஒரு மாதத்துக்கு முன்னர் இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று திடிரென அவர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.