அஜித் கூறிய முக்கியமான அறிவுரை: பிக்பாஸ் அபிராமி
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை நேற்று பிக்பாஸ் புகழ் சாக்சி வெளியிட்ட நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரும் அஜித்துடன் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் நடித்தவருமான அபிராமி அஜித் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அஜித்துடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம் என்றும், நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்றும் கூறிய அபிராமி, அவருடன் படப்பிடிப்பில் செலவழித்த நேரங்களையும், உடன் நடித்த அனுபவங்களையும் மிகவும் ஸ்பெஷலாக நினைப்பதாகவும், அதனை வாழ்க்கை முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் மற்றவர்களுக்காக எதையும் செய்ய வேண்டியதில்லை; நமக்காக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என அஜித் கூறிய முக்கிய அறிவுரையை நான் என்றும் மனதில் வைத்திருப்பேன். மிகப்பெரிய இடத்தில் இருந்தாலும், அவர் மிகவும் சாதாரணமாக, எளிமையாக இருப்பது ஆச்சரியத்துக்கு உரியது. அவருக்கு ஆன்மிக நம்பிக்கை அதிகம். பாசிடிவ் மனிதர். அந்த குணத்தை அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று கூறினார்.
மேலும் தனக்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும், நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருந்தாலும் நல்ல கதையை தேர்வு செய்து நடிக்க பொறுமையாக இருப்பதாகவும் அபிராமி மேலும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments