பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் பட்டியல் இதோ:
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் நேற்று முதல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தனது வீட்டில் தன்னுடைய சிறுவயது அனுபவங்களுடன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள் குறித்த பட்டியல் இதோ:
பாத்திமா பாபு: செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை
லொஸ்லியா: இலங்கை தமிழ்ப்பெண், இலங்கை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்
சாக்சி அகர்வால்: ரஜினியின் 'காலா' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த நடிகை
மதுமிதா: ஓருகல் ஒருகண்ணாடி' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகை
கவின்: 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்தின் நாயகன்
அபிராமி வெங்கடாச்சலம்: அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்த நடிகைகளில் ஒருவர்
சரவணன்: 'பருத்திவீரன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த குணசித்திர நடிகர்
வனிதா விஜயகுமார்: நடிகர் விஜயகுமாரின் மகள் மற்றும் நடிகை
சேரன்: இயக்குனர் மற்றும் நடிகர்
ஷெரின்: துள்ளுவதோ இளமை, 'விசில்', 'நண்பேண்டா' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை
மோகன் வைத்யா: கர்நாடக இசைக்கலைஞர், பாடகர் மற்றும் வயலின் வாசிப்பாளர். ஒருசில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
தர்ஷன்: இலங்கையை சேர்ந்த மாடல் நடிகர்
சாண்டி: நடன இயக்குனர்
முகன்ராவ்: மலேசிய மாடல் மற்றும் இசையமைப்பாளர்
ரேஷ்மா: 'வம்சம்' உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியலில் நடித்த நடிகை
நேற்றைய முதல் நாளில் போட்டியாளர்களின் அறிமுகங்கள் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. இன்று முதல் வழக்கமான நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments