பிக்பாஸ் 2: ஐஸ்வர்யாவின் தலைமுடியை பிடித்த இழுத்த செண்ட்ராயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக டாஸ்க் காரணமாக இடைவிடாத சண்டை நடந்து வருகிறது. மகத்-டேனியல், மகத்-ரித்விகா, பாலாஜி-மும்தாஜ் ஆகியோர்களின் சண்டையை அடுத்து தற்போது ஐஸ்வர்யா-செண்ட்ராயன் ஆரம்பித்துள்ளது என்பது சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவின் மூலம் தெரிய வந்துள்ளது.
இன்றைய புரமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் தலைமுடியை பிடித்து செண்ட்ராயன் இழுக்கின்றார். இதனால் ஆத்திரமடையும் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா செண்ட்ராயனுடன் மோதுகின்றனர். வழக்கம்போல் மற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் டீமின் ஸ்கிரிப்ட்படி இந்த சண்டையை வேடிக்கை பார்க்கின்றனர். முடிவில் 'எனக்கு மூஞ்சி பத்தி கவலையில்லை' என்று ஐஸ்வர்யா கூறுவதுடன் இந்த புரமோ வீடியோ முடிவடைகிறது.
நாம் ஏற்கனவே பலமுறை கூறியபடி ஒவ்வொரு நாளும் வெளியாகும் புரமோ வீடியோ சூப்பராக உள்ளது. இந்த சுவாரஸ்யத்தில் 50% நிகழ்ச்சியில் இருந்தால் கூட நிகழ்ச்சி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் புரமோவுக்கும் நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லாமல் பலமுறை இருப்பதால் தான் நிகழ்ச்சி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/isNSNSg3mv
— Vijay Television (@vijaytelevision) August 16, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout