பிக்பாஸ் இல்லத்தில் மோதலின் தொடக்கம்!

  • IndiaGlitz, [Tuesday,June 19 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சிறுசிறு மோதல்கள் நடந்தாலும் அந்த மோதல் பெரிய அளவில் இல்லை. மும்தாஜை பார்த்து பொன்னம்பலம் 'மல மல என்ற பாட்டை பாடியது, செண்ட்ராயனை மும்தாஜ் பெண்களின் துணிகளை தொடக்கூடாது என்று கண்டித்தது, ஐஸ்வர்யா பேசி கொண்டிருந்தபோது பாலாஜி கமெண்ட் அடித்தது போன்ற சின்ன சின்ன மோதல்கள் மட்டுமே இதுவரை நடந்துள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில் போட்டியாளர்களுக்கு ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் நீங்கள் அதிகம் வெறுக்கும் நபர் யார்? விரும்பும் நபர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாளர்கள் பதில் கூறும்போது நிச்சயம் மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோதலை ஆரம்பித்து வைத்த பிக்பாஸூக்கு யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் நன்றி கூறுவதை பார்க்கும்போது இருவரும் ஏதோ திட்டத்தில் உள்ளனர் என்பதும் தெரியவருகிறது.

இந்த டாஸ்க்கால் பாலாஜி, நித்யாவுக்கு இடையிலும், மும்தாஜூக்கும் ஒருசிலருக்கும் இடையிலும் மோதல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் மோதல் வந்தால்தான் நிகழ்ச்சியும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று பார்வையாளர்களும் எதிர்பார்க்கின்றனர் என்ற உண்மையையும் இங்கு சொல்லியாக வேண்டியுள்ளது