கத்துவது, பொய் சொல்வது, அழுவது இதுதான் ஐஸ்வர்யாவின் வேலை: பிக்பாஸ் 1 பிரபலம்

  • IndiaGlitz, [Friday,September 21 2018]

ஐஸ்வர்யாவின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்த்து அவரை திட்டாதவர்களே இல்லை என கூறலாம். அவரது நெருங்கிய தோழியான யாஷிகா கூட ஐஸ்வர்யாவிடம் இருந்து ஒதுங்கி இருக்கவே கடந்த சில நாட்களாக முயல்கிறார். ஐஸ்வர்யாவின் நெகட்டிவ் இமேஜை சரிசெய்ய ஆர்த்தி, காயத்ரி ஆகியோர்களை பிக்பாஸ் அனுப்பினாலும் அவர்கள் இருக்கும் வரை நல்ல பிள்ளையாக இருந்த ஐஸ்வர்யா, அவர்கள் வெளியேறியதும் மீண்டும் முருங்கை மரமேறிய வேதாளம் போல் மாறிவிட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான காஜல், ஐஸ்வர்யா குறித்து கூறியபோது, 'நான் பார்த்தவரை, கத்துவது, பொய் சொல்வது, பிறரை கொடுமைப்படுத்துவது, அழுவது, இதையெல்லம்தான் ஐஸ்வர்யா சிறப்பாகச் செய்கிறார். ஐஸ்வர்யாவின் கையில் வாலினி ஸ்ப்ரேயை அடிக்கும்போது கண்ணை மூடிக்கொள்ள ரித்விகா கூறினார். ஆனால் விஜயலட்சுமியின் கண்ணிலேயே வாலினி ஸ்ப்ரேயை அடித்து மனிதத்தன்மையே இல்லாதவர் என்பதை ஐஸ்வர்யா நிரூபித்தார்.

ஒரு டாஸ்க்கை செய்ய முடியாவிட்டால் கையை எடுத்துவிடலாம். அதைவிடுத்து எல்லோரின் கவனத்தை தன்மீது திருப்ப அவர் அழுது நாடகமாடியது கொடுமை. ஒருவகையில் அவரை பார்த்தால் பாவமாகவும் உள்ளது. அவர் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

More News

அடுத்த படத்தில் இசையமைப்பாளராகும் விஜய்சேதுபதி

கோலிவுட் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதி நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாகவுள்ளது. 'செக்க சிவந்த வானம்' மற்றும் '96' ஆகிய படங்கள் இவற்றில் முக்கியமானது

தலைமறைவான கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள்

சமீபத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில்

நான் அப்படித்தான் கத்துவேன்: முழுசா லூசா மாறிவிட்ட ஐஸ்வர்யா?

பிக்பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யாவுக்கு எந்த நேரத்தில் ஹிட்லர் டாஸ்க் கொடுத்தார்களோ அதிலிருந்தே அவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கில் கத்தி கத்தி பழக்கமாகி அதுவே தொடர்கதையாகிவிட்டது.

எம்ஜிஆர் படத்தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி

எம்ஜிஆரின் கனவு திரைப்படமான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற படத்தை அனிமேஷனில் தயாரித்து வரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகவிருக்கும்

ஆடு, மாடுகளுடன் இனி பேசலாம்: நித்தியானந்தா அதிரடி

மென்பொருள் மூலம் ஆடு, மாடுகள் உள்பட அனைத்து விலங்குகளையும் பேச வைக்கவுள்ளதாக சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.