மும்தாஜூக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் உள்ள மும்தாஜ், ஐஸ்வர்யாவை விட ஆபத்தானவராகவே கருதப்படுகிறார். அன்பு என்ற ஆயுதத்தை வைத்து ஒவ்வொருவராக கார்னர் செய்து அவர் நடத்திய நாடகம் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும், கமல்ஹாசனுக்கும் கூட மிகவும் தாமதமாகவே புரிந்தது.
அன்பு என்ற யுக்தியின் மூலம் எந்த டாஸ்க்கையும் சரிவர செய்யாமல், வீட்டில் உள்ள வேலைகளைக்கும் டிமிக்கு கொடுத்து வரும் மும்தாஜ், சாப்பாடு விஷயத்திலும் சில சலுகைகளை உடல்நிலையை காரணம் காட்டி பெற்று கொள்கிறார்.
இந்த நிலையில் மும்தாஜின் இந்த சலுகைகளுக்கு ஆப்பு வைக்க பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். மும்தாஜ் விரும்பி சாப்பிடும் உணவுபொருட்களை எடுத்து வைத்து கொண்ட அவர்கள், இன்றில் இருந்து நாங்கள் இருக்கும் வரை இந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சரிசமமாகவே நடத்தப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.
பிக்பாஸ் 1 போட்டியாளர்களின் இந்த நடவடிக்கை மும்தாஜூக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் வழக்கம்போல் இயல்பாக இருப்பது போன்று நடிக்கின்றார். இந்த ஒரு வாரம் மும்தாஜுக்கு சரியான டார்ச்சர் வாரமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/NAsQ5KsUNL
— Vijay Television (@vijaytelevision) September 11, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com