நீட் டாக்டர் அனிதா கேரக்டரில் நடிப்பது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வு காரணமாக மெடிக்கல் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கிவிட்டது. தங்கள் வீட்டு பெண் இறந்ததை போல தமிழகமே கண்ணீரில் மூழ்கியது.

இந்த நிலையில் நீட் டாக்டர் அனிதாவுக்கு இன்று பிறந்த நாள். அவர் இல்லாத முதல் பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கொண்டாடி வரும் நிலையில் இன்று அனிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dr. S.அனிதா M.B.B.S  என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தில் அனிதா கேரக்டரில் நடிக்கவுள்ளவர் ஜல்லிக்கட்டு மற்றும் பிக்பாஸ் புகழ் ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் மத்தியில் பிரபலமான ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது வாயால் தனது புகழை கெடுத்து கொண்டார். இந்த நிலையில் அனிதாவின் கேரக்டருக்கு ஜூலியை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுட் சகுனிகார்த்திக் ஆய்வாளரை மிரட்டும் ஆடியோ

சமீபத்தில் மதுரையில் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட ரவுடிகளில் ஒருவராகிய சகுனிகார்த்திக், சில நாட்களுக்கு முன் ஆய்வாளர் ஒருவரை செல்போனில் மிரட்டிய உரையாடல் குறித்த ஆடியோ ஒன்று வெளியாகி யுள்ளது.

ஸ்ரீதேவி குறித்து அமலாவின் அர்த்தமுள்ள பதிவு

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவரது அழகே அவரது உயிருக்கு ஆபத்தாக மாறிவிட்டதும் ஒரு காரணம்.

இந்த ஆண்டிற்குள் நம்பர் ஒன் இடம்? வரலட்சுமியை தேடி வரும் வாய்ப்புகள்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலட்சுமி இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு முதலில் IndiaGlitz சார்பில் மனங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

விஜய் தந்தையுடன் ரஜினி சந்திப்பா? பரபரப்பு தகவல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனியார் கல்லூரி ஒன்றில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கவுள்ளார்.

கூகுளில் தேடினாலும் கிடைக்காத ஹேர்ஸ்டைல்: பாலாவிடம் சிக்கிய துருவ்?

இயக்குனர் பாலா படம் என்றால் ஹீரோக்களின் ஹேர்ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். கூகுளில் தேடினால் கூட இதுபோன்ற ஒரு ஹேர்ஸ்டைலை கண்டுபிடிக்க முடியாதவாறு பாலா தனது ஹீரோக்களின் ஹேர்ஸ்டைலை மாற்றிவிடுவார்.