காயத்ரி மீது திடீர் கரிசனம் ஏன்? சில சந்தேகங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஜூலி எந்த அளவுக்கு வில்லித்தனம் செய்கின்றாரோ அவருக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல காயத்ரி. அவர் பேசிய ஒரு வார்த்தை ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி போராட்டம் நடத்தும் அளவுக்கு சென்றது. அதுமட்டுமின்றி மூஞ்சியும் மொகரக்கட்டையும், வெளியே வா பார்த்துக்குவோம், உள்பட பல தகாத வார்த்தைகள் காயத்ரியின் வாயில் இருந்து உதிர்ந்தவை.
ஜூலி பொய்யானவள் என்பதை குறும்படம் மூலம் அவருடைய பச்சோந்தித்தனத்தை வெளிப்படுத்திய கமல், காயத்ரியின் பலவிஷயங்கள் குறித்து கேள்வியே கேட்கவில்லை. சீர் என்பது மட்டும் ஒரு விதிவிலக்கு.
இந்த நிலையில் திடீரென தற்போது காயத்ரியை நல்லவராக மாற்றும் வகையில் ஸ்கிரிப்ட் சென்று கொண்டிருப்பதாக பலர் சந்தேகம் அடைந்துள்ளனர். ஓவியாவை இனி யார் எதிர்த்தாலும் எடுபடாது என்பது உறுதியாகிவிட்டது என்பதும் ஓவியாவுடன் நெருக்கமாக இருந்தால் அவருக்கும் புகழ் கிடைக்கும் என்பதும் தற்போது உறுதியாகிவிட்டது. எனவே காயத்ரியை நல்லவராக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி ஓவியாவுடன் நெருக்கமாக்குவதுதான். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றதா? என்ற சந்தேகம் பலர் மனதில் எழுந்துள்ளது.
காயத்ரியை நல்லவராக காட்ட முயற்சிப்பதற்கு சமீபத்தில் காயத்ரியின் தாயார் கமல்ஹாசனை சந்தித்ததாக கூறப்படும் வதந்தி காரணமா? அல்லது காயத்ரி ஒரு தேசிய கட்சியில் இருக்கின்றாரே அந்த கட்சி காரணமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments