ஓவியா இல்லாத பிக்பாஸை ஓரங்கட்டிய பார்வையாளர்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 08 2017]

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் ஹாட் டாக் ஆக பேசப்பட்டு கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் சிலை இல்லாத மண்டபம் போன்று வெறுமையாக காணப்படுகிறது. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல்ஹாசனின் அதிரடியால் ஓரளவுக்கு விறுவிறுப்பாக சென்ற பிக்பாஸ் நேற்று முதல்முறையாக டல்லடிக்க தொடங்கியது.
சாப்பிடுவது, தூங்குவது, சமைப்பது, பொய் சொல்வது, புறம் பேசுவது, டாஸ்க் என்ற பெயரில் நடக்கும் கொடுமை ஆகியவை திரும்ப திரும்ப ஒரே மாதிரி இருப்பதால் பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் காலை, மதியம், மாலை என வரும் மூன்று புரமோக்களை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கும். ஆனால் ஓவியா வெளியேற்றத்திற்கு பின்னர் இந்த புரமோவை கண்டுகொள்ள ஆளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓவியா இருக்கும்போது புரமோ வீடியோவுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்டுகள் சமூக வலைத்தளத்தில் குவியும். ஆனால் தற்போது ஒருசில நூறு லைக்ஸ்கள் மட்டுமே கிடைத்து வருகிறது. இப்படியே போனால் பிக்பாஸ்ம் புஸ்பாஸ் ஆக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை
எனவே மீண்டும் ஓவியாவை உள்ளே கொண்டு வர முயற்சிப்பது, அல்லது வேறு பிரபல நபர்களை வரவழைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சேனல் நிர்வாகம் உள்ளது. ஏற்கனவே புதிய வரவுகள் உண்டு என்று கமல்ஹாசன் கோடிட்டு காட்டியுள்ளதால் புதியதாக வருபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்