பிடிக்கலைன்னா வெளியே அனுப்பிடுங்க.. ரசிகையின் கேள்விக்கு மைனாவின் சர்ச்சை பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என மைனா ரசிகை ஒருவரின் கேள்விக்கு பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய கமல்ஹாசன் எபிசோடில் பார்வையாளர்கள் போட்டியாளர்களுக்கு கேள்வி கேட்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஒரு ரசிகை ரட்சிதா மற்றும் மைனா உங்கள் இருவருக்கும் பெய்டு ஹாலிடேஸ் எப்படி இருந்தது? என கேட்டார்.
தங்களை கிண்டல் செய்யும் கேள்வி என்பதைக் கூட புரிந்து கொள்ளாத மைனா இந்த கேள்விக்கு சிரித்தார். ஆனால் ரக்ஷிதா சீரியசாக இந்த கேள்வியை எடுத்துக் கொண்டு, ‘பெய்டு ஹாலிடேன்ஸ் என்று நான் நினைக்கவில்லை, என்னால் முடிந்தவரை நன்றாக தான் விளையாடி வருகிறேன். என்னுடைய விளையாட்டு சரியில்லை என்று நீங்கள் நினைத்தால் இன்னும் நன்றாக விளையாட முயற்சிக்கிறேன்’ என்று கூறினார்.
இதனை அடுத்து மைனா பதில் கூறியபோது, ‘என்னால் முடிந்த வரை நான் விளையாடிக் கொண்டிருக்கின்றேன், என்னுடைய விளையாட்டு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக நீங்கள் என்னை வெளியேற்றி விடலாம்’ என்று கூறினார். மைனாவின் இந்த பதில் நெட்டிசன்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக இந்த வாரம் மைனா நாமினேஷன் பட்டியலில் இருந்தால் வெளியேறவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Audience Questions to #Myna
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 27, 2022
And #Rachita
Paid Holidays Eppidi Iruku??#Myna ithuku Eppidi Sirikranga
Nu Parunga ??#BiggBoss #BiggBossTamil6#BiggBossTamil pic.twitter.com/7ZMPmVHTnz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments