தற்கொலைக்கு முயன்றாரா ஓவியா!

  • IndiaGlitz, [Saturday,August 05 2017]

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பங்கேற்பாளர்களின் டார்ச்சர் காரணமாக பரணி வெளியேறியதில் இருந்தே இந்த நிகழ்ச்சி மீது இருந்த மரியாதை சுத்தமாக போய்விட்டது. அதன் பின்னர் ஓவியாவை பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கார்னர் செய்தது பார்வையாளர்களை ஆத்திரமடைய செய்தது.
ஆனால் பரணி போல் பயந்து ஓடாமல், தன்னை டார்ச்சர் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்ததால் ஓவியா மீதான மதிப்பும் மரியாதையும் பார்வையாளர்கள் மத்தியில் இமயம் வரை உயர்ந்தது.
ஆனால் ஆரவ் காதல் விஷயத்தில் ஓவியா கொஞ்சம் தடுமாறினார். நூறு சதவீதம் உண்மையாக இருக்கும் ஓவியாவுக்கு ஆரவ் ஒருவர் மட்டுமே ஆறுதலாக இருந்த நிலையில் அவரும் தன்னை வெறுக்கின்றார் என்றதும் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன் பாதிப்பால் அவருடைய செயல்களில் கொஞ்சம் வித்தியாசம் காணப்பட்டது.
அனைத்து பங்கேற்பாளர்களும் தன் முகத்தின் முன் ஆறுதலாக பேசி, தான் இல்லாத போது புறம் பேசுவதை அறிந்த ஓவியா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்தே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் பிக்பாஸ் தரப்பில் இருந்து சரியான பதில் இல்லாததால் நேற்று நீச்சல் குளத்தில் திடீரென விழுந்தார். அவர் தற்கொலை செய்ய முயன்றதாக அனைவரும் அச்சமடைந்து அவரை காப்பாற்றி அவருக்கு ஆறுதல் அளித்தனர்.
ஓவியாவின் மேனேஜர் வந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியாவை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் இதுகுறித்து தகவல் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ ஓவியாவின் வெளியேற்றம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு பின்னடைவாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

More News

செத்தால் கூட இனி ஆதார் எண் வேண்டும்: மத்திய அரசின் அடாவடி

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டாரா ஓவியா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கும் நிலையில் அனைவருமே ஓவியாதான் டைட்டில் வின்னர் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

'வேலைக்காரன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான ஓப்பனிங் வசூல் தரும் படங்களை கொடுத்து வருபவர் சிவகார்த்திகேயன்.

இந்த வார எலிமினேஷன் யார்? வெளியே கசிந்த தகவல்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது யார் என்பது வரும் ஞாயிறு அன்று தெரிந்துவிடும்.

பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது: ஓவியா குறித்து பரணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியேறிய நடிகர் பரணி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.