ஜூலி திருந்தவே மாட்டார்! கமல் முன் ஓவியா சொன்னது நிரூபணம் ஆனது
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வாரம் கமல்ஹாசன் முன் பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவரான ஜூலி, 'நான் இதுவரை சில வார்த்தைகள் அதிகம் சேர்த்து சிலவற்றை கூறியது உண்மைதான்(பொய்க்கு இப்படி ஒரு சால்ஜாப்பு). ஆனால் இனிமேல் நான் பொய் சொல்லவே மாட்டேன்' என்று கமல்ஹாசன் முன் உறுதியளித்தார். அப்போது கமல்ஹாசன், ஜூலியில் கருத்து குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று ஓவியாவிடம் கேட்டபோது, 'அவங்க இப்படித்தான் சொல்வாங்க, ஆனால் திரும்பவும் பொய் சொல்வாங்க, அவங்க திருந்தவே மாட்டாங்க' என்று கூறினார்.
ஓவியாவின் இந்த பதிலை கமல் விரும்பவில்லை. திருந்துகிற ஒருவரை அவநம்பிக்கையுடன் பார்க்க கூடாது என்று ஓவியாவிடம் கூறினார். ஆனால் ஓவியா கூறியது நேற்றைய நிகழ்ச்சியில் உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
நேற்று ஓவியா, ஜூலியை பார்த்து சாதாரணமாக நடந்து கொண்டே ஒரு பாட்டை பாடினார். 'கொஞ்ச நேரம் உன்னை கொல்லட்டா..ஜூலி..கொஞ்ச நேரம் உன்னை கொல்லட்டா.. என்று பாடினார்.
ஓவியா என்ன சொன்னாலும் உடனே உள்ளே சென்று மற்றவர்களிடம் ஒப்பிக்கும் பழக்கம் உடைய ஜூலி, இதுகுறித்து சக்தியிடம் கூறும்போது, 'ஓவியா என்னை பார்த்து கொஞ்ச நேரம் உன்னை கொல்லட்டா ஜூலின்னு முறைச்சுகிட்டே, நல்லா கோவமா கைய இப்படி வச்சுகிட்டு பாட்டு பாடிட்டு போறாண்ணே' என்று கூறினார். ஜூலி இன்னும் திருந்தவில்லை என்பதும், இனிமேலும் திருந்த வாய்ப்பில்லை என்பதும் இதில் இருந்து உண்மையாகியுள்ளதாக ஓவியா ஆர்மியினர் கருத்து கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com