ஓவியாவை தூக்கி உச்சத்தில் வைத்த ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் பரபரப்பாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருசில நாட்களிலேயே ஓவியா பக்கம் திரும்பி விட்டது. ஓவியாவுக்காகவே பலர் அந்த நிகழ்ச்சியை சீரியல்களையும் மறந்து பார்க்க தொடங்கினர். பத்து படம் நடித்து பெறாத புகழை ஒருசில நாட்களில் ஓவியா பெற்றார். கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பு, அக அழகு, பிரச்சனைகளை துணிவுடன் எதிர்கொள்ளும் தன்மை, உண்மையாக இருப்பது, குறிப்பாக இயல்பாக இருப்பது ஆகியவை அவருக்கு ரசிகர்கள் குவிய காரணமாக இருந்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஓவியா நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் டுவிட்டரில் ஒரு பதிவை செய்தார். தன் மீது மிகுந்த அன்பு வைத்துள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறிய ஓவியா, தனக்கு கிடைத்த அனைவரின் அன்பை ஒரு மிகப்பெரிய ஆசிர்வாதமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். இந்த டுவீட்டுக்கு இதுவரை இல்லாத வகையில் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஓவியாவின் டுவீட்டுக்கு ஒரே நாளில் 45 ஆயிரம் லைக்குகளும், 13 ஆயிரம் ரீடுவீட்டுகளும் 8 ஆயிரம் கமெண்ட்டுக்களும் குவிந்துள்ளது. இந்த அளவுக்கு கோலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களின் டுவீட்டுக்களுக்கு கூட வரவேற்பு கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது மீண்டும் திரைப்படங்களில் ஓவியா நடிக்க தொடங்கினால் வெகுவிரைவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிடுவார் என்றே கருதப்படுகிறது.
At a loss for words, to describe the love 💖 & care from each one of you.. I feel blessed, thankful & to be more responsible for all ur love
— Oviyaa (@OviyaaSweetz) August 28, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com