ஹாலிவுட் நடிகையின் ஹேர் ஸ்டைலுக்கு மாறிய ஓவியா
Wednesday, August 9, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மன அழுத்தம் காரணமாக வெளியேறிய ஓவியா, கடந்த ஞாயிறு சென்னை சிட்டி செண்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போதும் தான் ஆரவ்வை காதலிப்பதாக தெரிவித்தார்.
ஓவியா வெளியேறினாலும் இன்னும் அவரை பற்றியே ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி டல்லடித்த நிலையில் மீண்டும் அவரை நிகழ்ச்சியில் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹாலிவுட் நடிகை நடாலி டார்மர் அவர்களின் ஹேர்ஸ்டைலுக்கு திடீரென ஓவியா மாறியுள்ளார். ஏற்கனவே இதே ஹேர்ஸ்டைலை கமல்ஹாசனின் மகள் அக்சராஹாசனும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவியாவின் புதிய ஹேர்ஸ்டைல் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது. ஓவியா எதை செய்தாலும் கொண்டாடி வரும் ஓவியா ஆர்மியினர் இந்த ஹேர் ஸ்டைலையும் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments